தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரி சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறையினை உருவாக்கும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவீரமாதக ஈடுபடத் தொடங்கியுள்ளது.
அனைத்துலக விசாரணையினால் ஏற்படப்போகும் அபாயங்களில் இருந்து சிங்கள தேசம் தன்னுடைய நலன்களை பாதுகாகத்துக் கொள்வதற்காக, ஆட்சிமாற்றம் எனும் புதிய முகத்துடன் இரத்தும் தோய்ந்த தனது கரங்களை அனைத்துலக அரங்கில் மூடிமறைத்து வருகின்றது.
இவ்வேளை சிங்களத்தின் தமிழனஅழிப்பின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி, தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலகத்திடம் கோரி, தனது செயற்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய செயல்முனைப்பினை மேற்கொண்டுள்ளது.
இராஜதந்திரத்தளம் :
ஐ.நா மனித உரிமைச்சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளை நோக்கி நேரடியாகவும், நாடுவாரியாக உள்ள தூதரங்கள் ஊடாகவும் தொடர்சியான சந்திப்புக்கள்.
மனித உரிமைத்தளம் :
அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கைக்கு, புலம்பெயர் தேசங்களில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள், சமூக -அரசியற் பிரதிநிதிகளின் தோழமையினைத் திரட்டல்.
மக்கள்தளம் :
அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தி தாயகம் புலம் தமிழகம் ஆகிய தளங்களில் பல லட்சம் ஒப்பங்களை இலக்காக கொண்டு மாபெரும் கெயெழுத்துப் வேட்டை.
பரப்புரைத்தளம் :
மார்ச் 16ம் நாள் ஐ.நாள் மனித உரிமைச்சபை முன்றலில் இடம்பெறவிருக்கின்ற நீதிக்கான போராட்டத்துக்கு பரப்புரை
புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் மத்தியிலும் தமிழகத்திலும் தொடர்சியான பரப்புரைக்கூட்டங்கள். கருத்தரங்குகள்.
வேற்றின மக்களிடத்தில், சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோர முகத்தினை அம்பலப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வெளிப்படுத்தியும், லண்டனில் பிரச்சார பயணம்.
ஊடகத்தளம் :
அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறையினை உருவாக்குவதற்கான வலுவானதொரு கருத்துருவாக்கத்தினை அனைத்துலக ஊடகத்தளத்தில் ஏற்படுத்தும் செயற்பாடுகளோடு,https://www.facebook.com/InternationalInvestigationNOW சமூக வலைத்தளங்கள் ஊடான பரப்புரை.
இவ்வாறு பன்முகத்தளங்களில் தனது செயற்பாட்டினை தீவிரப்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்திய தனது நான்காவது ஆவணக் கையேட்டினையும் வெளியிடுகின்றது.
இதேவேளை ஐ.நா மனித உரிமைச்சபையிலும் கூட்டத் தொடர் நாட்களில் தனியாகவும் கூட்டாகவும் செயற்பாடுகளை ஜெனீவாவில் மேற்கொள்கின்றது.
TGTE, Transnational Government of Tamil Eelam
Social Buttons