Latest News

February 25, 2015

காலத்தை இழுத்தடிக்கும் சூழ்ச்சியில் புதிய ஆட்சியாளர்கள்..
by Unknown - 0

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மையுள்ள உள்ளக விசாரணை நடத்துவதற்கு இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் கால அவகாசம் கோரியதை அடுத்து ஐ.நா. விசார ணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவது செப்டெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



அடுத்த செப்டெம்பருக்குள் இலங்கையின் உள்ளக விசாரணை நிறைவடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடனேயே காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குறிப்பிட்ட காலத்துக்குள் இலங்கை தனது உள்ளக விசாரணைகளைப் பூர்த்தி செய்யுமா என்பதே இன்று எழும் முக்கிய கேள்வியாகும்.



உள்ளக விசாரணை குறித்த காலத்துக்குள் பூர்த்தியடைவதற்கான சாத்தியம் கிடையாது என்கிறார் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா. உள்ளக விசாரணை நிறைவடையாதுபோனால் ஐ.நா. அறிக்கையை வெளியிடுவதை மேலும் ஆறுமாத காலத்துக்கு ஒத்திவைக்கு மாறு இலங்கை கோரலாம். அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதும், குற்றம் செய்வோர் தண்டிக்கப்படுவதும் மேலும் தாமத மடையலாம். காலம் இழுத்தடிக்கப்படும்போது அறிக்கையை நீர்த்துப்போக வைக்கும் சாத்தி யமும் உண்டு.

செப்டெம்பர் மாதமளவில் உள்ளக பொறிமுறை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமே தவிர, அதனை நிறைவு செய்திருக்க முடியாது என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார். உள்ளக பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான பணிகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும். அதற்கான கலந்தாலோசனைகள் மட்டுமே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், இந்த உள்ளக விசாரணை பொறி முறையை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றத் தில் புதிய சட்ட ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து எதிர்வரும் மே மாதத்துடன் ஆறு வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 2012, 2013, 2014 என்று அடுத்தடுத்து மூன்று தீர்மானங்களை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. ஒவ் வொரு தீர்மானத்துக்குப் பின்பும் இலங்கைக்கு தீர்மானத்தை செயற்படுத்த ஒருவருட கால அவகாசம் வழங்கப்பட்டது. அது நிறை வேற்றப்படாத பட்சத்திலேயே மற்றைய தீர்மானம் கொண்டு வரப்பட்டதை நாம் அவதானிக்க முடியும்.



2014 மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட மூன்றா வது தீர்மானத்தின் பிரகாரம் மனித உரிமைகள் ஆணையாளரால் ஐ.நா. விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதன் இடைக்கால வாய்மூல அறிக்கை கடந்த செப்டெம்பரில் வெளியிடப்பட் டது. இறுதி அறிக்கை அடுத்த மாதம் ஆரம்ப மாகவுள்ள 28ஆவது கூட்டத்தொடரில் சமர்ப் பிக்கப்படவிருந்தது.

இப்படியான நிலையிலேயே புதிய ஆட்சியாளர்களின் இராஜதந்திர ரீதியிலான கடுமையான முயற்சிகளின் பெறுபேறாக அறிக்கை சமர்ப் பிப்பானது செப்டெம்பர் மாத அமர்வுவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் அமைந்த நம்பகத்தன்மையுள்ள விசாரணையை நடத்து வதற்கு புதிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் எதிர்பார்ப்புடனேயே இந்த ஆறுமாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 



ஆனால், அரசு ஐ.நா. விசாரணைக் குழு அறிக் கையை தாமதப்படுத்துவதுடன் நிற்காது உள்ளக விசாரணையையும் குறித்த காலத்துக்குள் நிறை வடையச் செய்யாது இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடிப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியாகவே நாம் இதனை நோக்கமுடியும். 




ஆதலால் உள்ளக விசாரணை பூர்த்தியடையும் வரை காத்திராது ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கையை கூடிய விரைவில் வெளியிட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கவேண்டும்.


« PREV
NEXT »