Latest News

February 25, 2015

சூரிய குடும்பத்துக்கு வெளியில் ஒரு மிகப் பெரிய நிலவு வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
by Unknown - 0

சூரிய குடும்பத்துக்கு வெளியில் ஒரு மிகப் பெரிய நிலவை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியது. பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரியது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய புதிய நட்சத்திரங்கள் மின்னுவதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புகள் மூலம் இந்த நிலவு கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பூமியில் உள்ள சந்திரனை விட 70 மடங்கு அதிக வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது.

சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழனைவிட 4 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »