Latest News

February 25, 2015

தமிழ் சிவில் சமூக அமையத்தின் கையெழுத்துப் பிரச்சாரம் ஆரம்பம்
by Unknown - 0

இலங்கை மீதான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையினைக் கண்டித்து, தமிழ் சிவில் சமூக அமையம் நேற்றைய தினம் கையெழுத்துப் பெறும் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் நிலையில், முதலாவது கையெழுத்தையிட்டு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையகத்தின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிர்ப்பும் கவலையும் தெரிவித்தும்,

ஐநாவின் விசாரணைக் குழு இலங்கைக்கு நேரடியாக வந்து விசாரணைகளை நடத்த அரசாங்கத்தை அனுமதிக்குமாறு ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விட வேண்டும் எனக் கோரியும்,

எந்த விதத்திலுமான உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதனை தெளிவுபடுத்தியும், சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றைக் கோரியும் தமிழ் சிவில் சமூக அமையம் கையெழுத்துப் பிரச்சாரம் ஒன்றை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.

இதன் பொருட்டு இலங்கைத் தீவு வாழ் தமிழர்களின் கையெழுத்துகள் பெருமளவில் திரட்டப்பட்டு ஐ.நா மனித உரிமை ஆணையளருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »