இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதம் நடைபெற்று
கேள்விகளை அடுக்கிய நீதிபதி
கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி, நீதிபதி பவானிசிங்கிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஜெயலலிதா வழக்கின் அடிப்படைத் தன்மை என்ன என்பதாவது தெரியுமா எனவும் கேட்டார். போயஸ்தோட்டம் வழக்குகாலத்துக்கு முன்பே ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் வாங்கப்பட்டுள்ளது.

போயஸ் தோட்டத்தை சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்த்தது ஏன் என்றும் கேட்டார். பணப்பரிவர்த்தனை ஆதாரம் ஜெயலலிதா வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றும், எந்தெந்த தேதியில் எவ்வளவு பண பரிவர்த்தனை நடந்தது என்பதற்கு விளக்கம் தாருங்கள் என்ற பவானி சிங்கிடம் கேள்வி எழுப்பினார்.
பினாமிகளா?
மேலும், சசிகலா உள்பட 3 பேர் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்றும் வினா எழுப்பிய நீதிபதி, பினாமி சட்டப்படி வழக்கு தொடராமல் சொத்து குவிப்பு என வழக்கு ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பதில் தராத பவானிசிங்
நீதிபதி குமாரசாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார். தாம் கேட்ட 10 கேள்விகளுக்கும் பவானி சிங் பதில் தராததால் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நல்லமநாயுடுவின் பதில்
போயஸ் இல்லம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசிடம் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார். போயஸ் இல்லத்தை அழகுப்படுத்த ரூ. 7 கோடி செலவிடப்பட்டதே வழக்கில் போலீசார் சேர்த்து உள்ளனர். நல்லநாயுடுவின் சாட்சிய பதிவை முழுமையாக படிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments
Post a Comment