கௌதம் மேனன் தற்போது என்னை அறிந்தால் படத்தின் ப்ரோமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு விஜய்யுடன், யோகன் என்ற படத்தில் இணைவதாக இருந்தது.
இதை தொடர்ந்து படத்தின் புகைப்படங்களும் வெளிவந்தது, பின் இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதால் அதிக ஆங்கில வார்த்தைகள் இருந்ததாம். இதனால், விஜய் நம்ம ஊர் கலாச்சாரத்திற்கு இது வேண்டாம் என்று எண்ணியதால் படம் கைவிடப்பட்டது என்று கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் ஒரு மலையாள வாரஇதழ் ஒன்றிற்கு கௌதம் கொடுத்த பேட்டியில் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ கதை கைவிடப்படவில்லை என்றும், அந்த கதையில் சில மாற்றங்களை செய்து விரைவில் படமாக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Social Buttons