பொலநறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன, இன்னமும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதியினால் சட்டவிரோத மணல் அகழ்வு தடை செய்யப்பட்டுள்ள போதும், அவருடைய சகோதரர் இரகசியமாக இதனை மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பியின் பொலநறுவை மாவட்ட தலைவர் சரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிக்கந்த, மன்னம்பிட்டிய ஆகிய இடங்களில் இடம்பெறுகின்ற இந்த நடவடிக்கைகள் சிலவேளைகளில் ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்கலாம் என்றும் சரத் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை பிரியந்த சிறிசேன நிராகரித்துள்ளார்.
Social Buttons