தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று செவ்வாயக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கை புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் தொடர்பில் இன்னும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று அமெரிக்காவிடம் முறையிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் 25நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதன்போது ஊழல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் வடக்குகிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் காணி அபகரிப்பு உட்பட்ட பல விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை.
காணாமல் போனோர் விடயம் தொடர்பிலும் புதிய அரசாங்கத்தின் கவனம் முக்கியத்துவம் பெறவில்லை.
இதனை தவிர தமிழ் சிறைக்கைதிகளின் விடயத்திலும் இலங்கை அரசாங்கம் இன்னும் முன்னுரிமை வழங்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிஸ்வாலிடம் தெரிவித்தனர்.
இதேவேளை இனப்பிரச்சினை தீர்வு உட்பட்ட விடயங்கள் தொடர்பில் குழு ஒன்றை அமைக்க புதிய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இதன்போது பிஸ்வால் கூட்டமைப்பினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கூட்டமைப்பினர் அது தொடர்பில் முழுமை விடயங்கள் வெளியாகவில்லை என்றும் பிஸ்வாலிடம் சுட்டிக்காட்டியது.
புதிய அரசாங்கத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்தே தமிழ் மக்கள் அதற்கு வாக்களித்தனர். எனினும் இன்னும் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Social Buttons