ஜோன் அமரதுங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால் பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிவித்தலைக் கண்டு தாம் பயப்படப் போவதில்லையென தெரிவித்துள்ளார் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
இவ்வாறான எச்சரிக்கைத் தொனியைக் கண்டு தமது கட்சி அஞ்சப் போவதில்லையெனவும் அமைச்சுப் பதவியிலிருந்து ஜோன் அமரதுங்கவை விரட்டும் வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுதியாகப் போராடும் எனவும் தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்துக்கு பாடம் கற்பிக்க இது நல்ல தருணம் எனவே தமது கட்சி அதைத் தவற விடாது என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றமாதலால் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக ஏற்கனவே 114 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளமையும் அவை வத்தள பிரதேச சபை தலைவர் மீதான வன்முறையை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற அமைச்சர் தவறி விட்டார் என தெரிவிப்பிதாகவும் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment