பருத்தித்துறைமுனை கடற்கரைப் பகுதியிலிருந்து 20 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பொதியொன்று ஞாயிற்றுக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் பி.தந்தநாராயண தெரிவித்தார்.
கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கஞ்சா மீட்கப்பட்டது. மேற்படி பகுதியில் கஞ்சா பொதியிருப்பதை அவதானித்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை மீட்கப்பட்டன.
எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொறுப்பதிகாரி கூறினார்.
No comments
Post a Comment