Latest News

February 08, 2015

சாவகச்சேரியில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் படுகாயம்
by admin - 0

kavinthan
Vaal
சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.   குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த செல்வராசா உதயராசா (வயது 34)  என்பவரே படுகாயமடைந்தவராவார்.   மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,    வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் அழைத்த 6 பேர் கொண்ட குழுவினர், அவர் மீது திடீரென வாள் வெட்டு நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.     இதனால்  தலையிலும் கையிலும் படுகாயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.     மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
« PREV
NEXT »