Latest News

February 07, 2015

ஈபிடிபியை காப்பாற்ற யாழ்.பல்கலை பீடாதிபதிகள் சதி!! சீறி எழுகின்றது ஆசிரியர் சங்கம்!!
by admin - 0

ஈபிடிபி சார்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேரவை உறுப்பினர்களை காப்பாற்றும் வகையினில் பல்கலைக்கழக பீடாதிபதிகள் உயர்கல்வி அமைச்சரிற்கு அனுப்பி வைத்திருந்த கடித விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக பீடாதிபதிகள் கடிதம் எழுதியமை தொடர்பில் நடவடிக்கைக்கு எடுக்க யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக பீடாதிபதிகள் உயர்கல்வி அமைச்சருக்கு நிர்வாகம் தூய்மையாக இருப்பதாக எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் பிரதியை தம்மிடம் தருமாறு ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
அக்கடிதத்தை தராத பட்சத்தில் பீடாதிபதிகள் அணைவரையும் பதவி விலகும்படி கேட்டுக்கொள்வதாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் எழுத்து மூலம் அறிவித்தல் மேற்கொள்ளப்படும் என்றும தீர்மானம் எடுக்கப்படடுள்ளது. பெரும்பாலான அங்கத்தவர்களின் பொதுவான விருப்பத்துக்கமையவே இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments