Latest News

February 06, 2015

வடக்கிலுள்ள படையினரை குறைக்க தயாரில்லை: ருவான்-அரச ஆதரவாளர் சம்பந்தன் ஐயா இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்
by admin - 0

வடக்கிலுள்ள படையினரை எக்காரணம் கொண்டு குறைப்பதற்கு தயாரில்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். இன நல்லினக்கம் என்று சம்பந்தன் சுதந்திர தினத்தில் பங்கு பற்றியும் அவரால் இராணுவ குறைப்பு செய்யமுடியவில்லை இதனால் சம்பந்தர் தமிழ் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.


 யாழ்.பலாலிலுக்க இன்று வெள்ளிக்கிழமை(6) விஜயம்மேற்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பலாலி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இராணுவ வெற்றி நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.   

இதன்பின்பு, யாழ்.படைகளின் கட்டளை தலைமையகத்தில் இராணுவ வீரர்களுக்கு மத்தியில் உரையாற்றுகையிலே இராணுவகுறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'கடந்த 30 வருடகால யுத்தத்தை தொடர்ந்து தற்போதே நாட்டில் அமைதியான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி தந்த இராணு வீரர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன். 

நாட்டில் நிரந்தரமான சமாதானம் நிலவ வேண்டுமென்பதே ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் எதிர்பார்ப்பாகும். யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன். 

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் இராணுவ வீரர்கள் தமது துறைசார் கற்கைநெறியை மேற்கொள்ளவும் உயர்கல்வியை தொடரவும் இராணுவ பயிற்சி நெறிகளை மேற்கொள்ளவும் வழியமைக்கப்படவுள்ளது. 

புதிய அரசாங்கத்தின் இடைகால வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் விலைகுறைப்பு மற்றும் சம்பள அதிகரிப்பு என்பவற்றில் இராணு வீரர்களும் உள்வாங்கப்படுவர்' என அவர் மேலும் தெரிவித்தார். இவருடைய கருத்துக்கு ஐயா சம்பந்தர் என்ன பதில் வழங்குவார் என பகிரங்க அழைப்பு விடுக்கப்படுகிறது .
« PREV
NEXT »

No comments