காணி உரிமையாளரை கொலைசெய்து கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை) கோத்தபாய ராஜபக்ச அபகரித்தமை அம்பலமாகியுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்திய காணியை ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று பார்வையிட்டனர்.
அபகரிப்பு குறித்த காணியின் உரிமையாளரின் மகள் தெரிவிக்கையில், இந்த காணி தனது தந்தைக்கு சொந்தமானது என தந்தையை கொலை செய்து விட்டு, கோத்தபாய ராஜபக்ச காணியை பலவந்தமாக கைப்பற்றியதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த காணியில் ரஷ்யர்கள் சிலர் கட்டட நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment