Latest News

February 20, 2015

புதிய இராணுவத்தளபதி-போர் குற்றவாளி
by admin - 0


புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.இவர் 21 வது இராணுவத்தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை சுட்டுக்கொல்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அனுப்பிய மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அவர் லெப்டினன் தரத்திற்கும் பதவிஉயர்த்தப்பட்டுள்ளார். தற்போதுள்ள இராணுவ அதிகாரிகளில் அனுபவம் கூடியவரான இவரையே கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்ல அனுப்பியிருந்தார். இதனடிப்படையிலேயே அவர் பின்னர் வெளிநாட்டு தூதுரகமொன்றிற்கு நியமிக்கப்பட்டிருந்தார்
« PREV
NEXT »