Latest News

February 18, 2015

மஹிந்தவிற்காக நடைபெறவிருக்கும் கூட்டம் வெற்றி பெற வேண்டும் பிரபா எம்.பி.
by admin - 0

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வர­வேண்டும் என்ற அழுத்­தத்தை கொடுக்கும் கூட்டம் பாரிய வெற்­றியை பெற வேண்டும். அதன் மூலம் ஸ்திர­மான ஒரு நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என  ஊட­கங்­க­ளுக்கு முன்னாள் பிரதி அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிரபா கணேசன் கருத்து தெரி­வித்­துள்ளார்.
மேலும் அவர் தெரி­விக்­கையில்,
இன்று நாட்டில் நிலை­யான ஆட்­சியை நாம் காணக்­கூ­டி­ய­தாக இல்லை. மாறாக அர­சி­யலில் என்ன நடக்கும் என்ற சந்­தேகம் மக்­க­ளி­டையே எழுந்­துள்­ளது. ஆட்சி மாற்­றத்­திற்கு வாக்­க­ளித்த சிறு­பான்மை மக்­க­ளி­டை­யேயும் இச் சந்­தேகம் நில­வு­கின்­றது. நல்­லாட்­சியை இன்று இவர்கள் வழங்­கு­கி­றார்­களா? 100 நாள் வேலைத்­திட்­டத்தை முழு­மை­யாக செய்து முடிப்­பார்­களா என்­பது சந்­தே­கத்­திற்­குள்­ளாகியுள்ளது.
இன்று நான் உட்­பட அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், ஆத­ரவு தெரி­வித்த கட்சித் தலை­வர்கள் எல்­லோ­ருக்கும் இரண்டு வாக­னங்கள் வழங்­கப்­பட்டு அதற்­காக ஒரு லட்ச ரூபா எரி­பொருள் மானி­யங்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன. இது தான் மைத்­திரி, ரணிலின் நல்­லாட்­சியா இது போன்ற பல நல்­லாட்சி விப­ரங்­களை வெளி­யிட நான் தயா­ராக இருக்­கின்றேன்.
நாட்டின் ஜனா­தி­பதி என்­பவர் பிறி­தொரு நாட்­டுக்கு செல்லும் பொழுது பய­ணிகள் விமா­னத்தில் பய­ணிப்­பது உள்­நாட்டு மக்­களை சந்­தோ­சப்­ப­டுத்தி விடலாம். மாறாக நாட்டின் இறை­மையை காப்­பாற்றும் வகையில் எமது பொரு­ளா­தார வளர்ச்சிக் கேற்ப தனி விமா­னத்தில் பய­ணிப்­பதே எமது நாட்டின் கௌர­வத்தை காப்­பாற்­றி­யி­ருக்கும். இன்று ஆட்சி மாற்­றத்­திற்கு பின் எமக்கு முன்னால் உள்ள கேள்வி எமது தமிழ் தேசி­யமா? அல்­லது எமது நாட்டின் இறை­யாண்­மையா என்­பதை யோசிக்க வேண்டும். நாட்டை விட்டுக் கொடுத்தால் தமிழ் தேசி­யத்தை காப்­பாற்ற முடி­யுமா? அமெ­ரிக்கா போன்ற மேற்­கு­லக நாடு­களின் ஆதிக்கம் எமது நாட்டை ஆக்­கி­ர­மிக்கும் போது தமிழ், சிங்­கள மக்கள் ஒற்­று­மை­யாக பய­ணிக்க வேண்­டிய ஒரு காலக்­கட்­டத்தை நாம் எதிர்நோக்க வேண்­டி­யுள்­ளது.
இந்த தரு­ணத்தில் கடந்த ஆட்­சியின் போது மஹிந்த ராஜ­பக் ஷ செய்த தவ­று­களை உணர்ந்­தி­ருப்பார் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது. மீண்டும் அவர் அந்த தவ­றுகள் நடை­பெ­றாது. தனது சகோ­தரரின் அர­சியல் மூல­மா­கத்தான் தான் அவர் கறைப்­பற்­றி­ருக்­கின்றார் என நான் நினைக்­கின்றேன். இருப்­பினும் முது­கெ­லும்­பில்­லாத பிர­த­மரை விட மஹிந்த ராஜ­பக் ஷ அர­சி­ய­லுக்கு வரு­வா­ரே­யாயின் மஹிந்த சிந்­த­னையை விட புதிய சிந்­த­னையை நாம் ஏற்­ப­டுத்தி புதிய ஆட்­சியை உரு­வாக்க முடியும் என்று நினைக்கின்றேன்.
மஹிந்தவின் மீள் வருகையின் மூலமாக அவர் ஒரு நாளும் சிறுபான்மை மக்களை புறந்தள்ள முடியாத பாடத்தை படித்திருக்கின்றார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்
« PREV
NEXT »