யாழ்ப்பாணம், கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்ற குடும்பஸ்தரை செவ்வாய்க்கிழமை (17) முதல் காணவில்லை என அவரது மனைவி, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (18) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சிவராத்திரி தினத்துக்காக பொலிகண்டியிலுள்ள ஆலயத்துக்கு சென்று வருவதாகச் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பொலிகண்டி பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து காணாமற்போனவரின் துவிச்சக்கரவண்டி, பேர்ஸ் என்பவற்றை மீட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன
Social Buttons