Latest News

February 02, 2015

கோத்தபாய மேசையில் இருந்த KP தொடர்பான ரகசிய அறிக்கையை கைப்பற்றப்பட்டது !
by admin - 0

மகிந்த ஆட்சியில் இருந்தவேளை KP கோத்தபாயவிடம் சரணடைந்தார். இந்த சரணடைவுக்கு கூட "றோ" அமைப்பு பின்னணியில் இருந்தது. அது எல்லாம் ஒரு பெரிய கதை. அது ஒருபுறம் இருக்க சரணடைந்து அவர் கொழும்பு வந்தவேளை சில ரகசியங்களை கோட்டபாயவிடம் கக்கியுள்ளார் KP. பங்களாதேஷில் உள்ள "ஆக்கிரைன்" என்னும் கம்பெனியிடம் இருந்து புலிகளுக்காக இவர் விமானம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். அதனை இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் சர்வதேச கடல்பரப்பில் எந்த வழியாக வரும் என்பதனை 2005ம் ஆண்டுக்கு முன்னரே இவர் "றோ" அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

அதுபோக புலிகள் வாங்கிய சில ஆயுதங்கள் 2009க்கு முன்னதாக எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று(இலங்கைக்கு வெளியே) என்பது தொடர்பான சில தகவல்களையும் KP கோட்டபாயவிடம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை புலனாய்வுப் பிரிவினர் தயார் செய்து அதனை கோட்டபாயவிடம் கையளித்துள்ளார்கள். அதன் பிரதிகளை தற்போது உள்ள மைத்திரி அரசு கைப்பற்றியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்த செய்திகள் கசிந்துள்ளது. 

இதனால் இனி வரும் நாட்களில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாக உள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பல ஆண்டுகளாக ஆயுதங்களை கொள்வனவு செய்து கொடுத்து வந்த நபர் KP அதில் எந்த மாற்றமும் இல்லை.ஆனால் பிற்காலத்தில் கடற்புலிகள் பாரிய வளர்சியை அடைந்திருந்தார்கள். இதனால் கடல் புலிகள் தாமே ஆயுதக் கொள்வனவில் ஈடுபட ஆரம்பித்தார்கள். 

முதன் முறையாக அவர்கள் வெளிநாடு ஒன்றில் ஆயுதங்களை வாங்கி அதனை முல்லைத்தீவுக்கு கொண்டு சென்றார்கள். இதற்கிடையே என்னை புறம் தள்ளிவிட்டு அவர்கள் ஆயுதங்களை கொள்வனவு செய்கிறார்களா ? அவர்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று KP தனது நண்பர்களுக்கு கூறியுள்ளார். 

எங்கே புலிகள் அந்த ஆயுதங்களை முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லட்டும் பார்போம் என்று KP சவால் விடுத்த நாட்களும் உள்ளது. ஆனால் கடல் புலிகள் அதனை செய்துகாட்டினார்கள். இருப்பினும் பின்னர் கடல் புலிகள் கொண்டு வந்த பல ஆயுதக் கப்பல்களை அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்து ,அது தொடர்பான தகவல்களை இந்தியா மற்றும் இலங்கைக்கு நேரடியாக வழங்கி வந்தது.

இதன் காரணமாகவே இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. ஆட்டிலறி ஷெல்களின் பற்றாக்குறை, RPG பற்றாக்குறை, உரிய நேரத்தில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வராதது என்று புலிகளின் பின்னடைவுக்கு இதுவே காரணம். இக் கப்பல்களை காட்டிக்கொடுத்த நபர் வேறு யாரும் அல்ல KP தான்.
« PREV
NEXT »

No comments