டிரான்ஸ் ஏசியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று தாய்வான் தலைநகர் தாய்பேவில் ஆற்றுக்கருகில் விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
58பேர் பயணம் செய்த இந்த உள்ளக பிரயான விமானம் தற்போது கீலுங் ஆற்றில் பாதி மூழ்கியவண்ணம் உள்ளது என பிபிஸி செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்புப்பணிகள் இடம்பெற்றுவரும் அதேவேளை- 16பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 30 பேர் இன்னமும் மீட்கப்படாத நிலையில் விமானத்திலலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons