இலங்கையின் 67ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன தலை மையிலான புதிய ஆட்சி பதவிக்கு வந்தபின்பு இடம்பெறும் முதலாவது சுதந்திரதினக் கொண்டாட்டம் இதுவாகும்.
1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. இலங்கை பெற்ற சுதந்திரம் சிங்கள மக்களுக்கு மட்டுமே என்ற உணர்வு கடந்த பல தசாப்தகாலமாக தமிழ் மக்களுக்கு இருந்துவருகிறது. இதில் இம்முறையும் மாற்றம் ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்வு காணப்படாமல் இருக் கின்றன.
அன்றாட பிரச்சினைகளுக்கும் ராஜபக் அரசால் தோற்றுவிக்கப்பட்ட இனவாத அடிப்படையிலான பிரச்சி னைகளுக்கும் மட்டும் தீர்வு காண்பதில் புதிய ஆட்சி யாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழ் மக்கள், தமிழ்பேசும் மக்களின் அபிலாஷை களை முழுமையாகப் பூர்த்திசெய்யக்கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்படும் நாளே தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்களுக்கு சுதந்திர நாளாகும்.
இலங்கை முன்னோக்கிய காலப்பகுதியில் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெற்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்லால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிறுபான்மை மக்களின் பிரச்சினை களையும் மனதில்கொண்டதாக இவரின் கருத்து இருக்க லாம். ராஜபக் அரசிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் கட்சி தாவியவர்களில் சில ஊழல் பேர்வழிகளையும் மற்றும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைக்க வேண்டும், வடக்கில் இராணுவம் அபகரித்துள்ள காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது என்ற நிலைப் பாட்டிலுள்ள கட்சிகளையும் தற்பொழுது அதிகாரத்தில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி கொண்டுள்ளது. அதனால், தமிழ் மக்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடக்கூடிய சூழ் நிலை இன்னும் உருவாகவில்லை என்பதே யதார்த் தம்.
கெளரவம் மிக்க ஒரு நாட்டைக் கட்டியயழுப்பும் கடப்பாட்டை இதுவரை இந்த நாட்டை ஆண்ட ஆட்சி யாளர்கள் மேற்கொள்ள வில்லை. எத்தனை விழாக்கள், கோலாகலங்கள் இடம்பெற்றாலும் நாட்டில் வாழும் தமிழ் ‡ முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்து அவதிப்படும்போது நாடு பெற்ற சுதந்திரத்துக்கு அர்த்தம் இருக்காது.
சிறுபான்மை இனங்களை அடக்கி, ஒடுக்குவது, அவர்களின் வாழும் உரிமையை மறுப்பது, உலகம் அங்கீகரித்துள்ள மனித உரிமைகளை அனுபவிக்கவிடாது தடுப்பது, மனிதப்பண்புகளை காலில் போட்டு மிதிப்பது சுதந்திரம் அல்ல. தானும் வாழ்ந்து தனக்குரிய சுதந்திரங் களை மற்றவர்களும் அனுபவிக்க இடமளிக்கப்படும் போதுதான் உண்மையான சுதந்திரம் என்று கூறமுடியும்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ் மக்களின் கோரிக்கைகள், உரிமைகள் தொடர்பாக உத்தரவாதம் எதனையும் வழங்கவில்லை. கூட்டமைப் புடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வில்லை. ராஜபக் ஆட்சியைக் கவிழ்ப்பது பிரதானமாக இருந்ததால் புதிய ஜனநாயகக் கூட்டணிக்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவில்லாதுவிடில் மைத்திரியால் வென்றிருக்க முடியாது. ஆதலால், தற்பொழுது பந்து மைத்திரி பக்கமே உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து முழுமையான அரசியல் தீர்வு காண்பது மைத்திரிபாலவின் தார்மீக கடமையாகும்.
பல சுதந்திர அரசுகளைக் கொண்டிருந்த இலங்கையை ஐரோப்பியர் கைப்பற்றினர். பிரித்தானியா ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது. 1948இல் ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஆட்சி கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள சகல சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று சுதந்திரம் வழங்கும் போது பிரித்தானியா எதிர்பார்த்தது. அப்போதிருந்த தமிழ்த் தலைவர்களும் அப்படித்தான் நம்பினார்கள். ஆனால் சுதந்திரம் அடைந்தவுடனேயே சிங்களத் தலைவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்தனர்.
தமிழ் மக்களின் உரிமைகளில் கைவைத்தனர். கடந்த 67 வருடங்களாக இதுதான் தொடர்கிறது. புலி காடு மாறினாலும் புள்ளி மாறாது என்பார்கள். மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் அத்த னையும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும் அவர்களை அடக்கி ஒடுக்குவதிலுமே கவனம் செலுத்தி வந்துள்ளன.
ஆகவே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இன்றைய சுதந்திரதின வைபவத்தில், போரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது வரவேற்கத்தக்கதொன்றாகும். இரங்கல் தெரிவிப்பதுடன் அரசு நின்றுவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்கவேணடும்.
போர்க்குற்றம் இழைத்தோர் தண்டிக் கப்படவேண்டும். அப்பொழுதுதான் நல்லிணக்கத்துக்கான சூழ்நிலை நாட்டில் உருவாகும். நாட்டு மக்கள் அனைவரும் இன,மத பேதமின்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சூழ்நிலையை உருவாக்குவது புதிய ஆட்சியாளர்களின் எதிர்கால நடவடிக்கை யிலேயே தங்கியுள்ளது.
நன்றி சுடர் ஒளி
Social Buttons