இலங்கை இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையை நியாயப்படுத்தியுள்ள ஐ.நா, இந்த தீர்மானமானது ஒப்பீட்டளவில் மிகவும் பகுத்தறிவான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 28ஆவது அமர்வில் பேசிய பேரவையின் தலைவர் ஜோக்கீம் ருக்கர், 2014 காஸா மோதல் பற்றிய விசாரணைக் குழுவின் தலைவர் வில்லியம் ஸ்காபாஸ் பதவி துறந்தமை மற்றும் இலங்கை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் சார்பளவில் தனித்துவமான விடயங்கள். இவை தொடர்பாக வழமையான நிலையப்பாட்டிலிருந்து முடிவுகளை எடுக்கக்கூடாதென எச்சரித்துள்ளார். இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வு மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அந்த அமர்வின் போது இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், உள்ளக விசாரணைகளுக்கு கால அவகாசம் வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிப்பதை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிவித்தது. இந்த ஒத்திவைப்பு காரணமாக பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், ' அத்துடன், 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பது ஒத்துவைப்பதான தீர்மானமானது சரியானதுடம் அறிவார்ந்ததே' எனவும் ஜோக்கீம் ருக்கர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தத்தின் இறுதி கட்டத்தில், அதாவது 2009இல் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் 2012, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முழுமையான ஒரு விசாரணை நடத்துமாறு உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தை 47 அங்கத்தவர் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவை, கடந்த வருடம் மார்ச்சில் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.\
Social Buttons