Latest News

February 26, 2015

கோதாவின் அச்சுறுத்தல் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேறினேன் - பிரசாந்த ஜயகொடி
by admin - 0


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் அச்சுறுத்தல் காரணமாகவே தாம் நாட்டை வி;ட்டு வெளியேறியதாக முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.


சற்று முன்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அவர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடுமையான அரசியல் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேற உந்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ரத்தினபுரி மாவட்டத்தின் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகராகவும், காவல்துறை ஊடகப் பேச்சாளராகவும் தாம் கடமையாற்றி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.


எனினும் கடுமையான அழுத்தம் காரணமாக தாம் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார். அழுத்தங்களை நிராகரித்த போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.


நாட்டில் மீண்டும் நல்லாட்சி நிலவி வரும் காரணத்தினால் தாம் நாடு திரும்பியதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வைத்தும் தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தம்மை பாதுகாத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். பிரசாந்த ஜயகொடியை வரவேற்க அவரது உறவினர்கள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்கள்.
« PREV
NEXT »