Latest News

February 10, 2015

சம்பந்தன் மற்றும் சுமந்திரனிர்க்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள்!
by Unknown - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளை இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் காணக்கூடியதாக இருந்தது. 'போலி தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளே' எனக்குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகள், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையில் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டதைக் கண்டித்து ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் என சுவரொட்டியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. 


« PREV
NEXT »