Latest News

February 10, 2015

மேற்குலகத்தினரின் தேவைக்கேற்ப தலைகீழான பாதையில் பயணிக்கும் தேசிய அரசு !
by Unknown - 0

மேற்குலகத்தினரின் தேவைக்கேற்ப தலைகீழான பாதையில் பயணிக்கும் தேசிய அரசு நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய அரசு நாட்டை ஆளவில்லை; மைத்திரி, சந்திரிகா, சம்பந்தன், ஹக்கீம் ஆகியோர் அங்கம் வகிக்கும் தேசிய நிறை வேற்று சபையே நாட்டை ஆளுகின்றது என்றும் தெரிவித்தது.

அத்துடன், தேசிய அரசு என்ற போர்வையில் நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம். தேசிய அரசு எமக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்தது.

கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவர் வாசுதேவ நாணயக்கார, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவண்ஸ முதலான எம்.பிக்களும், மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட வாசுதேவ நாணயக்கார எம்.பி.,
தேசிய அரசு எமக்குத் தேவையில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான அரசே எமக்குத் தேவை. தேசிய அரசில் ஐக்கிய தேசியக் கட்சியே நூற்றுக்கு 80 வீதம் பங்கைக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர், அதன் அமைச்சரவையே உள்ளது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனால், அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்கக்கூடிய சக்திமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணியயான்றை உருவாக்குவோம். என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட விமல் வீரவண்ஸ எம்.பி.,
தேசிய அரசு என்பது மிகவும் அபாயகரமானது. மேற்குலகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவதற்குத் தேவையான தலைகீழான பாதையில் தற்போதைய அரசு பயணிக்கிறது. இதற்கு நாம் இடமளிக்க முடியாது. தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் என்பவற்றுக்கு இந்த தேசிய அரசு பெரும் சவாலாக உள்ளது. எனவே, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து கருத்து வெளியிட்ட மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில,

தேசிய அரசுநாட்டை ஆட்சி செய்யவில்லை. மைத்திரி, சந்திரிகா, சம்பந்தன், ஹக்கீம் ஆகியோர் அங்கம் வகிக்கும் தேசிய நிறைவேற்று சபையே நாட்டை ஆட்சி செய்கின்றது. ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் ஸ்ரீ லங்கா சுதக்திரக் கட்சியே உள்ளது. எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லை. மிகவும் குழப்பம் நிறைந்ததாகவே தேசிய அரசு இருக்கிறது. இது தாய்நாட்டுக்கு அச்சுறுத்தலானத என்றார்.
« PREV
NEXT »