சந்தேகநபர்களை 24 மணித்தியாளங்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் சட்டத்தை 48 மணித்தியாலங்களாக புதிய அரசு நீடித்துள்ளது.
கொலை மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை தற்போது 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கலாம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.
இதே வேளை இச் சட்டத்தை முன்னைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய போது அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்ததும், 2013 பெப்ரவரி 6ஆம் திகதியன்று இந்தச் சட்டத்துக்கு சபாநாயகர் அனுமதியை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment