பாராளுமன்ற பெரும்பான்மையுடன் திகழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் அனைத்து பேச்சுவார்த்தைகளையம் உதறித் தள்ளிய நிலையில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன் வைத்திருக்கும் நிலையில் அதைத் தடுக்க முடியாது விடின் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு இடம்பெறின் இம்மாதம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதும் தடைப்படுவதோடு 18வது திருத்தச் சட்டத்தை நீக்கவும் முடியாது போகும் நிலை உருவாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
வத்தள பிரதேச சபை தலைவர் மீதான தாக்குதல் சம்பவத்தின் அடிப்படையில் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 114 பேர் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்;கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment