Latest News

February 12, 2015

22 கோடிக்கு iPhone 6 காதலர் தின பதிப்பு
by admin - 0

விலை மதிப்புமிக்க 'ஹையர் எண்ட்' ஸ்மார்ட்போன்களின் வரிசையில் ஐ-போனுக்கு எப்போதுமே தனி இடமுண்டு. அந்த வகையில், காதலர் தின சிறப்பு கலெக்ஷனாக டைமண்ட் பதிப்பில் ஐ-போன் 6 வெளிவந்துள்ளது. 24-காரட் தங்கத்தினால் ஆன ஐபோன், ரோஸ் கோல்டு எனப்படும் பிளாட்டினத்தினால் ஆன ஐபோன், கண்ணைக் கவரும் நூற்றுக்கணக்கான விலைமதிப்பு மிக்க வைரகற்கள் பதிக்கப்பட்ட ஐபோன் என 3 மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் லேட்டஸ்ட் கலெக்சனை வெளியிட்டுள்ளது. 

Goldgenie's Diamond Ecstasy Collection-ன் ஒருபகுதியாக வெளிவரும் இந்த பதிப்பில் ஐபோனை வாங்க விரும்புவர்கள் அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு டிசைனிங்கை தேர்வு செய்து கொள்ளலாம். எக்சாட்டாக உங்களுக்கு வேண்டிய ஸ்டைலில் வைரகற்களை பதித்து வாங்கிக் கொள்ளலாம். இந்த Ecstasy stone palette-ல் பாரம்பரியமிக்க வெள்ளை நிற வைரகற்கள், இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த வைர கற்கள், மாணிக்கம், புஷ்பராகம், மரகதம் உள்பட நவரத்தினங்களும் அடங்கும். வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப வடிவமைத்துக் கொடுக்கப்படும் இந்த ஐபோன்களின் விலை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.22 கோடி வரை specifications-க்கு ஏற்றவாறும், பதிக்கப்படும் கற்களின் விலைகளுக்கு ஏற்பவும் நிர்ணயிக்கப்படுகிறது. 
« PREV
NEXT »

No comments