Latest News

February 12, 2015

மகிந்தவின் சிந்தனையை நடைமுறைப்படுத்தும் மைத்திரி-தமிழர்கள் கடலில் செல்ல அனுமதி அட்டை
by admin - 0

மீனவர்களின் பாஸ் நடைமுறை மன்னாரில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டமை புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. - இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் 

 பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் பிரிவு இரண்டாம் நிலை செயலாளர் தொம் சொப்பர் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மன்னாரில் சந்தித்து கலந்துரையாடினர் இக் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடாந்து தெரிவிக்கையில்; பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் பிரிவு இரண்டாம் நிலை செயலாளர் தொம் சொப்பர் ஜனாதிபதி தேர்தலுக்குப்பின் தமிழ் பேசும் மக்களின் நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

 நாம் தமிழ் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாகத் தெளிவுபடுத்தினோம்.ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதை விளக்கினோம். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எந்த ஒரு நடவடிக்கையையும் அரசாங்கம் இது வரையில் மேற்கொள்ளவில்லை. காணாமல் போனவர்களின் நிலமைகள் தொடர்பில் தீர்வுகள் இல்லை. 

100நாள் வேலைத்திட்டத்தின் நம்பிக்கை எவ்வாறு அமையப்போகின்றது என்பதுகேள்விக்குறியாகவே உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு பாஸ் நடைமுறைகள் மன்னாரில் மீண்டும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் கிராமத்தின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாக உள்ளது. வடக்கில் தமிழ் மக்களின் சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை. போன்ற விடயங்களை எடுத்துகூறினோம். -என்றார்
« PREV
NEXT »

No comments