வவுனியா நகரப் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி  ரகுநாதன் தெரிவித்தார்.
 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
நேற்று புதன்கிழமை வவுனியா நகரப் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் நடமாடியதாகத் தெரிவிக்கப்பட்டதனையடுத்து குறித்த பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 ஒருவரிடம் இருந்து 917 கிராம் கேரளக் கஞ்சாவும் மற்றைய நபரிடம் இருந்து 837 கிராம் கேரளக் கஞ்சாவும் மீட்கப்பட்டது. 
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்தே கஞ்சாவை கொண்டு வந்ததாகவும் தெரியவருகிறது. 
 

No comments
Post a Comment