WiFi நமக்கு பல விதங்களில் உபயோகமாக இருக்கின்றது. என்றாலும் அவற்றில் பல தீமைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு WiFi கண்டறியப்பட்டது. அன்று முதல் வைபை குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. வைபை தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஆபத்தாக இருக்கும் என்பதோடு குறிப்பாக குழந்தைகளின் உடல் மற்றும் மனதளவில் பாதிப்பை உண்டாக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஷயம் ஒன்றும் புதிதல்ல என்று கூறலாம், 2008 ஆம் ஆண்டில் WiFi மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க ஆய்வகம் பல உண்மைகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வைபை மூலம் ஏற்படும் 10 பாதிப்புகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்
வைவை பயன்படுத்திய பின் தூக்கம் வரவில்லையா, 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் போன் சிக்னல்களில் இருப்பவர்களுக்கு நிம்மதியாக தூங்குவதில் சிரமம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு விளங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வைபை மற்றும் தொலைபேசி சிக்னல்கள் சிறுநீரக வளர்ச்சியை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
செடிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வைபை கதிர்கள் இல்லாத அறையில் வளர்க்கப்பட்ட செடிகள் நல்ல வளர்ச்சியடைந்தது, மேலும் வைபை கதிர்வலைகள் இருக்கும் இடத்தில் வளர்க்கப்பட்ட செடிகள் வளரவே இல்லை.
4ஜி கதிர்வலைகளின் தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 4ஜி கதிர்வலைகள் மூளை வளர்ச்சியை அதிகளவு பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வைபை கதிர்வலைகள் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
லாப்டாப் மூலம் ஏற்படும் சூட்டினால் விந்தணு உற்பத்தி பாதிப்படையும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் வைபை கதிர்வீச்சுகளும் விந்தணு உற்பத்தியை அதிகளவு பாதிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
வைபை கதிர்வீச்சு பெண்கள் கருத்தரிப்பதை தாமதமாக்கும் என்றும் விளங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
செல்போன் மூலம் உண்டாகும் கதிர்வீச்சுகள் இதய துடிப்பை அதிகளவில் பாதிக்கும், மேலும் இதய துடிப்பை அதிகமாக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
விளங்குகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செல்போன் கதிர்வீச்சுகள் புற்று நோயை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
விளங்குகள் மற்றும் செடிகளில் காணப்படும் மெலட்டோனின் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
No comments
Post a Comment