பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட நிலையில், அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மிகப் பெரிய ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதா என்ற கம்பொல விதானலாகே தொன் வசந்த குமாரவிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் அவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அரசியல் வாதிகள் உட்பட உயர் மட்ட பிரமுகர்களின் பெயர்கள், விசேடமாக பொலிஸ் திணைக்களத்தில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த உயர் அதிகாரியுடன் வெலே சுதா தொடர்புகளை வைத்திருந்ததாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் வெலே சுதா பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
No comments
Post a Comment