Latest News

January 29, 2015

யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்காது- ராஜித சேனரத்தின
by Unknown - 0

இலங்கை அரசாங்கம் யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதேச  விசாரணைக்கு அனுமதியளிக்காது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனரத்தின,உள்நாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் இராணுவத்தினரிடம் உள்ள தனியார் நிலங்களை ஓப்படைப்பதற்கும்,அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கும் புதிய அரசாங்கம் எண்ணியுள்ளதாக அமைச்சரவை பேச்சளார் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் வடமாகாணத்தில் இராணுவபிரசன்னத்தை குறைக்கும்,கடந்த அரசாங்கத்தை போன்று இராணுவநடவடிக்கைகள் மூலமாக மாத்திரம் பயங்கரவாதத்தின் மீள் எழுச்சியை கட்டுப்படுத்தலாம் என இந்த அரசாங்கம் கருதவில்லை,

குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்தவரை அவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம் என நாங்கள் கருதவில்லை, வர்த்தக நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களை பொதுமக்களிடம் மீள வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்,

முன்னைய அரசாங்கம் எப்போதும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி குறித்தே சிந்தித்துகொண்டிருந்தது.

இராணுவநடவடிக்கைகளால் மாத்திரம் அதனை தடுக்க முடியும் என நாங்கள் கருதவில்லை.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 275 தமிழர்களை விடுதலைசெய்வது குறித்து ஆராயந்துவருகின்றோம், அவர்கள் வெறுமனே சந்தேகத்தின் பெயரில்கைதுசெய்யப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »