போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர்.
வடமாகாண முதலமைச்சர் மற்றும் யாழ்.ஊடக அமையப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கருத்து வெளியிடுகையில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லாத போதும் ஆதரவளித்த ஏனைய நாடுகளது முடிவிலும் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.
போர்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிடுவதா தொடர்ச்சியான நடவடிக்கை என்னவென்பது பற்றிய தீர்மானத்தை அதனை கொண்டு வரும் நாடுகளே தீர்மானிக்கும் என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்படும் தரவு அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதனிடையே வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் அவர் நேரில் சென்று சந்தித்திருந்தார்.
Social Buttons