Latest News

January 29, 2015

பிரதம நீதியரசரை, பதவியில் இருந்து விலக்கியமை சட்டத்திற்கும், நல்லாட்சிக்கும் புறம்பானது-எதிர்கட்சி தலைவர்
by Unknown - 0

vivasaayi Jaffna
Sribala de silva
உரிய முறைமைகளை பின்பற்றாது, பிரதம நீதியரசர் மொஹான் பீரிசை, பதவியில் இருந்து விலக்கியமை சட்டத்திற்கும், நல்லாட்சிக்கும் புறம்பானது என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாம் இது தொடர்பில் நாளைய தினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சலி, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி பிரதமரிடம் கருத்து கோரியிருந்தார்.

இலங்கை குடியரசின் தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் வீட்டுக்கு சென்ற ஒருவர் அவரை, பதவிலிருந்து விலகுமாறு அச்சுறுத்தல் மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதம நீதியரவசர் கறுவாத்தோட்டம் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார். இவ்வாறான முறைப்பாட்டை பிரதம நீதியரசர் மேற்கொண்டாரா என்பது குறித்தும, அந்த முறைப்பாட்டில் அச்சுறுத்தல் மேற்கொண்டது யார் என்பது குறித்து இந்த சபைக்கு அறிவிக்கும் படியும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஒருவரை அகற்றும் போது அரசியலமைப்பின் படி மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ள நிலையில் அவை உரியமுறையில் கடைபிடிக்கப்படவேண்டும்.

இதேவேளை, இது தொடர்பில் கலந்துரையாட கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற அடுத்தகட்ட செயற்பாடுகளுக்காக கட்சித் தலைவர்களை ஒன்று கூட்டி உடனடியாக விசேட சந்தர்ப்பத்தை இது தொடர்பில் ஏற்படுத்தித் தருமாறு கோருகிறேன். இதனைக் கவலைக்குரிய தருணமாக கருதுகின்றேன்.

இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பில் முழுமையான கருத்தை நான் நாளை வெளியிடுவேன், எதிர்கட்சித் தலைவருக்கும் அறிவித்துள்ளேன்.

இந்த விடயம் பற்றியும், காவல்துறை சம்பவம் தொடர்பிலும் விவாதிக்க எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.
அரசியலமைப்பை யாரும் மீறவில்லை. யாரையும் நியமிக்கவும் இல்லை.  நியமித்தவர்களை விலக்கவும் முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


« PREV
NEXT »