சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுப்படுவது எவ்வாறு என, முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னத்திடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கம் கோரியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் நேற்று அங்கு சென்றிருந்தார்.
இதன்போது இந்த விளக்கம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், விசாரணைக்காக மீண்டும் வருகை தருமாறு தமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.
Social Buttons