இலங்கையின் 7-வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாரதூரமான வன்முறைகளோ பெரிய அசம்பாவிதங்களோ இன்றி முடிவடைந்துள்ளது.
பல மாவட்டங்களில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இம்முறை வாக்குப்பதிவு உச்ச அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 'வன்முறைகள் நடக்கலாம் என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்தபடியாலேயே வன்முறைகள் நடக்கவில்லை என்று கூறலாம். எல்லா வாக்குப்பெட்டிகளும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படும் வரை எண்ணும் பணி தொடங்கப்படாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய பிபிசியிடம் கூறினார்.
இரவு 7 மணியளவில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Social Buttons