Latest News

January 20, 2015

கவனயீர்ப்புபேரணிக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு
by admin - 0

பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.நாளை நடைபெறும் கவனயீர்ப்பு பேரணிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு

வடமாகாணத்திலுள்ள பல்கலைக்கழக பட்டதாரிகள் தமது நியமனத்தை வலியுறுத்தி நாளைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடத்தவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தங்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள பல்கலைக்கழக பட்டதாரிகள் நிரந்தர அரச நியமனம் வழங்கப்படாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் காலத்திற்கு காலம் வரும் ஆட்சியாளர்களின் அடிவருடிகள் குறித்த பல்கலைக்கழக மாணவர்களை தமது அரசியல் நோக்கங்களிற்காக, பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதனை எதிர்த்தும், பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரியும் குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

குறித்த போராட்டம் காலை 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக நடைபெறவுள்ளது.

குறித்த போராட்டத்திற்கே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்கப் போவதாக தெரிவித்து இன்று மாலை அறிக்கை ஒன்றினையும் ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கின்றது.
4b
« PREV
NEXT »