அழிவு, ஆற்றுநீர் பாய்ச்சல், அறுவடை ஆகிய மூன்று விடயங்களையும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் இம்முறை சமகாலத்தில் எதிர்கொண்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பாக ஆரம்பமான வேளாண்மை அறுவடை மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. பலருக்கு இவ்வாறுவடை மூலம் சுமாரான விளைச்சலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதேவேளை ஒரு மூடை நெல்லுக்கான விலை தரத்திற்கேற்ப ரூபா 2200 தொடக்கம் ரூபா 2500 வரையான பணம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் சில விவசாயிகளுடைய விவசாய நிலங்கள் கடந்த கால வெள்ளப்பெருக்கினால் அழிவுற்றதுடன் தற்போது நிலவும் அதிக வரட்சியால் முற்றாக அழிவடைந்து அறுவடை செய்ய முடியாமல் பாரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வரட்சி இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் நீர்ப்பாய்ச்சல் வழங்க முடியாத ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலையும் உருவாகியுள்ளது.
மேலும் சில விவசாயிகள் உள்ளவற்றையாவது காப்பாற்றுவோம் எனும் நோக்கில் நீர்ப்பாய்ச்சல் வழங்கக் கூடிய இடங்களில் ஆற்று நீரினை பாய்ச்சுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக யானைகளின் தாக்குதலில் இருந்து தங்களது வயல் நிலங்களை பாதுகாக்கின்ற பணிகளில் இரவு பகலாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளமையையும் இங்கு அவதானிக்க முடிகின் றது.
இவ்வாறு இவ்வருடத்தின் பெரும்போகத்தில் அம்பாைற மாவட்ட விவசாயிகள் பல்வேறு வகையான
சம்பவங்களையும் எதிர்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டப் படவேண்டியதாகவும் உள்ளது.
Social Buttons