இந்த நாட்டிலே ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது உறவுகளில் பெரும்பாலானோர் தமது உறவுகளை இழந்து விதவைகளாகவும், அநாதைகளாகவும், வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் துயர்துடைக்க புலம்பெயர் அமைப்புக்கள் பல இன்று எமக்காக நேசக்கரம் நீட்ட முன்வந்திருக்கின்றமை பாராட்டத்தக்க விடயமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார்.
நாவிதன்வெளி ஸ்ரீ முருகனாலய முன்ற லில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.குணரெத்தினம் மற் றும் உறுப்பின ர்களான தேவன், பிள்ளை யான் தம் பி, கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களான எஸ்.ஜெயக்குமார் கமல தாசன், கிராமப் பெரியார்கள் எனப்பல ரும் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நேற்று முன்தினம் வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சூரிச் சிவன் கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பு வறிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.
இந்த நாட்டிலே தொன்று தொட்டு தமிழினம் வாழ்ந்து வருகின்றது. இதற்கான ஒரு கலாசாரம் இருக்கின்றது. அதனடிப்படையிலேதான் எமது கலாசாரத்தை பின்பற்றி இந்து மத அனுட்டானங்களை கடைப்பிடி த்து வாழ வேண்டியது ஒவ்வொருவரின தும் கடமையாகும். இந்நிலையில் இந்து மதத்தில் இருக்கின்ற இளைஞர்கள் யுவதிகளும் மதமாற்றத்திற்கு உள்ளாவதை நாம் அனைவரும் சேர்ந்து தடுத்து நிறுத்துவத ற்கு முன்வர வேண்டும்.
வடகிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையில் தமிழர்கள் அன்றிலிருந்து இன்று வரைக்கும் பல துன்பங்களை அனுபவிப்பவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கான எந்த நிவாரணங்களையும் இந்த அரசாங்கங்கள் பெற்றுக்கொடுத்ததற்கான சரித்திரமே கிடையாது அவ்வாறான சூழலில்தான் எமது சமூகம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதனை அறிந்து எமது மக்களின் துயர்துடைக்க புலம்பெயர் தேசத்தில் இருக்கும் எமது உறவுகள் அவர்கள் மூலம் அந்த நாட்டில் உள்ள மக்களிடம் சேகரிக்கப்ப ட்ட பணத்தை ஒன்று திரட்டியே எமது மக்களுக்காக அனுப்பி வைக்கின்றார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்த அதன்மூலம் எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்திலே மேலும் அவர்கள் வாழ்வாதார உதவிக்காக வேண்டி உதவிக்கரம் நீட்ட முன்வருவார் கள்.
அவர்களது பணத்தை பெற்றுக்கொண்டு அதனை வீண்விரயம் செய்ய முற்படுவீர்க ளேயானால் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரும் துரோகம் என்றே கூறமுடியும். அவ் வாறு இல்லாமல் இப்பணத்தை வைத்து உங்களது எதிர்காலத்திற்கு உகந்த வாழ் வாதார திட்டத்தை மேற்கொள்வதற்கு நீங் கள் முன்வர வேண்டும் என்றார்.
Social Buttons