Latest News

January 20, 2015

பயணிகளை அலைக்கழிக்கும் விமான பயண சீட்டு முகவர் நிறுவனம் TIME TRAVEL
by admin - 0



பயணிகளை அலைக்கழிக்கும் விமான பயண சீட்டு முகவர் நிறுவனம் TIME TRAVEL விமான பயண சீட்டினை ஒழுங்கு செய்து தரும் நிறுவனம் அக்கறையற்ற தரமற்ற சேவையினால் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலைமைகள் இடம்பெறுகிறது .
குறித்த நிறுவனமானது பயணத்திற்கான முழுப்பணத்தையும் பெற்றுக்கொண்ட போதிலும் தனது பயணிகளுக்கான நிறைவான சேவையை பெற்று தரவில்லை
லண்டன் -கொழும்பு இடையிலான மீள் (return )விமான பயணத்துக்கான பயண சீட்டை பெற்றுதந்த அந்த குறித்த நிறுவனம் பின்னர் பயணிகளுக்கான மீள் (return )பயணத்துக்கான திகதி மற்றும் நேரத்தை தாங்களாகவே பயணிகளுக்க அறிவிக்காமல் மாற்றிவிட்டுள்ளார்கள். இதனால் பயணிகள் மிகவும் அசௌகரியத்துக்கு ஆளாக நேரிடுகிறது மற்றும் மன உளைச்சல் பணவிரயத்துக்கும் உள்ளக்கப்பட்டுள்ளார்கள் .
இதனால் இப்படியான முகவர் நிறுவனங்களுடன் பயண சீட்டை பெற்று கொள்ளும் தமிழர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் 



பாதிக்கப்பட்ட  குறித்த நபர் லண்டனிலிருந்து கொழும்பு செல்வதற்கான மூன்று விமான பயண சீட்டுக்களை TIME TRAVEL முகவர் நிறுவனத்திலிருந்து   ஆவணி 16 ம் திகதி பெற்றுள்ளார். அதற்கான முன்பதிவு அவர்களுக்கு மறுதினம் குறித்த முகவரின் லண்டன் முகவரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பயண சீட்டுக்களுக்கான  பணமானது நபரின் வங்கி கணக்கிலிருந்து தனியார் நிறுவனமொன்றினது கணக்கிற்கு ஆவணி 19ம் திகதி அன்று மாற்றப்பட்டுள்ளது. அவர்களது பிரயாணம் புரட்டாதி 9ம் திகதி லண்டனிலிருந்து கொழும்புக்கும் புரட்டாதி 19ம் திகதி கொழும்பிலிருந்து லண்டனிற்கு மீள்பயணமாகவும் அமைந்திருந்தது. இந்த பயணத்தில் எந்த பிரச்சனையோ இடையூறோ ஏற்படவில்லை .


பயண ஒழுங்கின்படி கொழும்பை அடைந்த  பயணிகள் புரட்டாதி 19ம் திகதி லண்டன் திரும்புவதற்காக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை அடைந்தபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் அவர்களது பயணம் முன்பதிவு செய்யப்பட்டது பற்றிய விபரம் எதுவும் இங்கு இல்லை எனவும் அவர்கள் பயணிக்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் ஏமாற்றமடைந்த பிரயாணிகள் பயண ஏற்பாட்டை செய்து தந்த முகவரை தொலைபேசியில் அழைத்தபோது, அலுவலக நேரம் முடிவடைந்த காரணத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே விமான நிலைய அதிகாரிகளை அணுகி பயண முன்பதிவு காணப்படாமைக்கான காரணத்தை வினவியபோது, அவர்கள் பயணத்திற்கான நேர அட்டவணை மாற்றப்பட்டிருந்ததாகவும் அவர்களுக்கான பயணம் அதே நாள் காலை  6.20am அவர்கள் வருவதற்கு முன்பே இடம்பெற்றதாகவும் தெரிவித்திருந்தனர். எனினும் நேர மாற்றம் பற்றி ஒருநாள் முன்பதாகவே தாம் அறிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். .ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் டிக்கெட்டை பரிசோதித்து பார்த்ததில் குறிப்பிட்ட டிக்கெட் பல தடவைகள் திகதிகள் மற்றும் நேரங்கள் மாற்றி இருந்தமை தெரியவந்தது. 

தமது பயணத்திற்கான e-ticket ஐ விமான நிலையத்தில் வேண்டிப் பெற்றுக்கொண்ட பயணிகள் தமக்கான பயணம், ஒருவருக்கு புரட்டாதி 9ம் திகதி அன்றும் மற்ற இருவருக்கும் ஆவணி 29ம் திகதி அன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை தெரியவந்தது. தாம் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்ட அன்றைய தினம் எவ்வாறு தம்மில் ஒருவருக்கு பயண முற்பதிவு இடம்பெற்றிருக்க முடியும் என்று அதிசயமடைந்த நபர், விமான பயண நேரம் மாற்றப்பட்டதை தமக்கு முகவர் அறிவிக்கமையை எண்ணி விசனமடைந்தார்

குறித்த நேரத்தில் விமான பயணம் மேற்கொள்ளாமையால்  புதியதோர் பயண சீட்டை பெறவேண்டி இருந்ததுடன்  இருந்ததுடன் பயணம் தடைப்பட்டமையால் தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கான மேலதிக பணச்செலவும் நேர விரயமும் மறுநாள் வேலைக்கு செல்ல முடியாமையையும் பயணிகள் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. குறித்த நிறுவனத்துடன் இதை பற்றி கதைத்தபோது முன்னதாக அறிவிக்கப்பட்டதகவும் சாக்குபோக்கு கதைகளை கூறியதுடன் உரியபதிலை வழங்கவில்லை.

விமான பயண ஒழுங்கை செய்து தரும் TIME TRAVEL முகவரின் நேர்த்தியற்ற தரங்குறைந்த சேவையே குறித்த பயணிகளின் இடர்ப்பாட்டுக்கு காரணமாகும்.

இப்பயணிகள் லண்டன் திரும்பிய பின்னர் இதற்கான காரணம் கேட்டு எழுதிய கடிதத்திற்கும் குறித்த முகவர்  பதில் அனுப்பவில்லை.இதனால் மனவருத்தம் அடைந்த பயணிகள் தமக்கு இழைக்கப்பட்ட இடருக்கான நியாயத்தை நீதிமன்றை நாடிப் பெற்றுக்கொண்டனர்.

எனவே பயணிகளே முகவர்கள் குறித்து உசாராக இருங்கள்.

« PREV
NEXT »