Latest News

January 20, 2015

அரசியல் பழிவாங்கலிற்க்கு ஆளாகும் மகிந்த!
by Unknown - 0

1931 ம் ஆண்டிலிருந்த பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டிருந்தோம். ஆனாலும் முதல் தடவையாக எங்கள் வீட்டை சோதனையிட்டார்கள். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து மல்வத்து மகாநாயக்க தேரரான திப்பெட்டுவாவ சுமங்கல தேரரை சந்தித்துள்ளதோடு, அஸ்கிரிய மகாநாயக்க உடுகமபுத்தரஹித்த தேரரரையும் சந்தித்து ஒரு மணித்தியாலம் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியவர் தன் வீட்டை சோதனையிட்டது தொடர்பாக பேசினார். 1931 ஆம் ஆண்டிலிருந்த பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டிருந்தோம். ஆனாலும் முதல் தடவையாக எங்கள் வீட்டை சோதனையிட்டார்கள். சோதனையிட்டு கண்டுபிடித்ததொன்றும் இல்லை.

களுத்துறை, அகலவத்தை சம்பவங்கள் மூலம் அரசியல் பழிவாங்கல் நிகழ்வுகள் வெளிகாட்டப்படுவதாகவும் 1931ம் ஆண்டில் இருந்து அரசியல் செய்யும் தங்களுக்கு முதல் தடவையாக வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி மக்கள் இதனை எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் தேவைக்காக தான் எப்போதும் முன்நிற்பதாக மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கூடாது என்றும் அரசியல் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
« PREV
NEXT »