தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் தமது கட்சி ஆதரவாளர்களை அச்சுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார் தமக்கும் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் தற்போதைய அரசாங்கத்திற்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் பாதக நிலைமைகளை உருவாக்கும் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
Social Buttons