Latest News

January 20, 2015

காலி ஆயுதக் கப்பல்: 14 கடற்படை உறுப்பினர்கள் கடமையில் இருந்து வந்ததாக தகவல்
by admin - 0

காலியில் ஆயுதங்களோடு நங்கூரமிட்டிருந்த நிலையில் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் ஆயுதக் கப்பல் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே இயங்கியதாகவும் அக்கப்பலில் ஆகக்குறைந்தது 14 கடற்படை உறுப்பினர்கள் எப்போதும் காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் குறித்த கப்பலில் இருந்த ஆயுதங்களைப் பராமரித்ததாக நம்பப்படும் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பின்னணி இருப்பதாக பரவலாக நம்பப்பட்டு வந்த நிலையில் குறித்த நிறுவனம் சர்வதேச கடற்பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த பிற நாடுகளினது ஆயுதங்களையும் குறித்த கப்பலில் களஞ்சியப்படுத்தி வந்ததாகவும் நிறுவனத்தின் ஆலோகர் பதவியில் பல முன்னாள் இராணு உயராதிகளே தொடர்ந்தும் இருந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலிலிருந்து மூவாயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் மற்றும் ரவைகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

« PREV
NEXT »