Latest News

January 19, 2015

அகலவத்தையில் விசேட பாதுகாப்பு
by admin - 0

 அகலவத்தை பிரதேசத்தில் நேற்று பகல் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக விசேட காவல்துறை படையணி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் பொருட்டு காவல்துறை விசேட படையணி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சம்பவத்தில் ஒருவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments