இதனையடுத்து நகரசபை தலைவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நகர சபைக்கு சென்ற உப தலைவர் சபையைக் கூட்ட முணைந்தததால் ஏனைய முஸ்லிம் மற்றும் சிங்கள உறுப்பினர்கள் உப தலைவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கோபமுற்ற உப தலைவரின் தந்தை நகர சபைக்கு சென்று நகர சபையின் கண்ணாடியை அடித்து உடைத்ததை அடுத்து பொலிசார் அவரை தற்போது கைது செய்துள்ளனர். பேருவளை நகரசபைத் தலைவர் முஸ்லிம் என்பதனால் இப்பிரச்சினை சிங்கள, முஸ்லிம் குழப்பமாக மாற்ற முயற்சி மேற்கொள்வதற்காக உப தலைவர் தனது சிங்கள குழுவினருடன் நகர சபைக்கு சென்றுள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த நகர சபையானது மகிந்த ராஜபக்சவின் ஆளுகைக்குள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment