Latest News

January 13, 2015

திவிநெகும திட்ட 1,456,980,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து அமெரிக்கா பறந்த பசில்
by admin - 0

´திவிநெகும´ வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணத்தை மீளப் பெறுவது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சித் திட்டம் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கீழ் இயங்கி வந்தது. பசில் ராஜபக்ஷ இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments