இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் என கருதப்படும் வெலே சுதா என்ற கம்பொல வித்தானகே சமந்தகுமார (வடோவிட்ட சுதா) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தானில் வைத்து இவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று பிற்பகல் இடம்பெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 1ம் திகதி வெலே சுதாவின் மனைவியும் மாமியாரும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment