பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப்பயிற்சி நிறுத்தப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.
உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரமொன்றை முன் வைக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Social Buttons