Latest News

January 21, 2015

இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை இழந்தது யாழ்.மாவட்டம்!
by Unknown - 0

கடந்த 2014ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவுப் பட்டியலின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற அங்கத்தவர்களின் 2 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கு 9 பாராளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

எனினும் 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலின் படி 7 ஆசனங்கள் மட்டுமே அம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டால் குறைந்துள்ளது.

இவ்விரண்டு ஆசனங்களும் முறையே நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
« PREV
NEXT »