15 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்துள்ளோம். எனவே அவற்றை புதிய ஜனாதிபதி செய்து முடிப்பார் என்று நம்புகின்றோம் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று இடம்பெற்றது.
பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
எமது மக்களின் முன்னுரிமைக்குரிய கோரிக்கைகளை முன்வைத்தே கடந்த அரசாங்கங்களுடன் நாம் பணியாற்றி வந்துள்ளோம். முன்னர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.
எனினும் முழுமையடையாத கோரிக்கைகளையும் மற்றும் செய்து முடிக்கவேண்டிய கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என்று நாம் நம்புகின்றோம்.
குறிப்பாக சில தமிழ் ஊடகங்கள் எதிர்காலத்திலாவது மாற்றுக்கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு மதிப்பளிப்பதனூடாகவே தமிழ் மக்களிடையே கருத்தறியும் உரிமையை பாதுகாக்க முடியும்.
எனவே எதிர்காலத்திலாவது ஊடகங்கள் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 15 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்துள்ளோம். எனவே அவற்றை புதிய ஜனாதிபதி செய்து முடிப்பார் என்று நம்புகின்றோம் என்றும் அவர் மேலும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
Social Buttons